Posts

Showing posts from February 11, 2022
Image
   10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது..?தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு..? பள்ளி கல்வித்துறை தகவல் தமிழகத்தில், கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் ஓரளவு முடிக்கப்பட்டு உள்ளதால், முதல் கட்ட திருப்புதல் தேர்வுகள் அண்மையில் தொடங்கின. இந்த தேர்வுகள், முதல் முறையாக அரசு தேர்வுத் துறையின் பொதுவான வினாத்தாள் வழியே, பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 17 ஆம் தேதில் முடிகின்றன. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதுவும் பொதுத் தேர்வு போல ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முற...
  TN TRB முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு.. தடுப்பூசி கட்டாயம் கட்டாயம்.. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டித் தேர்வுகள் பல ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல போட்டித் தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நாளை (பிப்..12) தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆசிரியர் கல்வி வாரியமான TRB சார்பாக கணினி வழியில் நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 160-180 வரை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் த...
  அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். நிகர பணிக்காலம் ஒருவர் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்துவிட்டால் விருப்ப ஓய்வு பெறலாம்தான். ஆனால், 20 ஆண்டு பணி என்பது மொத்த பணிக்காலம் அல்ல. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் 01.04.2002 அன்று பணியில் சேர்ந்திருப் பார் எனில், 31.03.2022-ம் தேதியுடன் 20 வருடம் நிறைவு பெறுகிறது. இது (Gross service) மொத்த பணிக்காலம்தான். இந்த மொத்த பணிக்காலத்தில் அந்த ஊழியர், மருத்துவச் சான்று சமர்ப்பிக்காமலே எடுத்துக்கொண்ட சம்பளமில்லாத விடுப்பு, தண்டனை என அறிவிக்கப்பட்ட பணிக்காலம், ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டபோது தகுதிக்குமேல் எடுத்துக்கொண்ட பணியேற்பு இடைக்காலம், வரண்முறை (Regulation) செய்யப்படாத பணிக்காலம், பிள்ளைப் பருவபணி (18 வயதுக்குக் கீழ் உள்ளபோது செய்த பணி) ஆகிய அனைத்தும் தகுதியற்ற பணிக்காலம் எனப்படும். மொத்த பணிக் காலத்...
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினிவழி தேர்வு நாளை தொடக்கம்: தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்துகிறது. கணினி வழியிலான இத்தேர்வு பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், பிப். 16 முதல் 20-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும் நடத்தப்படுகிறது. தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நாள், தேர்வெழுதும் மாவட்டம், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு கடந்த 5-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்வு மையம் தொலைதூரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு7.30 மணி முதல் 8.15-க்குள் தேர்வு வளாகத்துக்குள் வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தேர்வர்களுக்கு குறைந்தபட்சம் 50 கி.மீ. தொலைவுக்கு அப்பால், வேறொரு மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால், தேர்வு நாளன்று காலை 7.3...