Posts

Showing posts from February 9, 2022
Image
ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி முன்பு மாணவர்கள்,பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் சத்தியமங்கலம் அருகே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அப்பகுதி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 175 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சரிவர கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிக்கரசம்பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களிடம் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராமமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியின் முன்பு கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட...
  ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுமா? திருப்பூர்:தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துசாமி அறிக்கை:திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பரமசிவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், புதிதாக துவக்கப்பட்ட முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர், கணித பட்டதாரி ஆசிரியர், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது.மாணவர் நலன்கருதி, இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, நடந்து வரும் பொதுமாறுதல் கலந்தாய்வில் நிரப்பிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.