Posts

Showing posts from February 8, 2022
  மக்கள் நல பணியாளர்கள் பணி: ஆய்வில் உள்ளது- தமிழ்நாடு அரசு தகவல் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும்பணி வழங்க ஆய்வு செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது . தி . மு . க . ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது . இதை எதிர்த்து தமிழ்நாடுஅரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உத்தர விட்டது . இதற்கிடையில் கரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டி ருந்தது . இந்த வழக்கு கடந்த மாதம் ( ஜனவரி 6) விசாரணைக்கு வந்த போது , தமிழ்நாடு அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் , பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியா
  PGTRB - முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு 12ம் தேதி துவக்கம்.   அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். வரும், 12ம் தேதி முதல் 180 மையங்களில் கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது. மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பதவிகளில் காலியாக உள்ள, 2,207 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்துகிறது. வரும், 12ம் தேதி முதல் 20 வரை, பாட வாரியாக, 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுதும், 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 200 மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேரலை காட்சி பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு குறித்த விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.