முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அனுமதி சீட்டு(Admit card) வெளியீடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 - 2021 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து கணினி வழித் தேர்வு இரண்டு அட்டவணைகளில் முறையே 12.02.2022 முதல் 15.02.2022 வரை மற்றும் 16.02.2022 முதல் 20.02.2022 வரை ( 19.02.2022 நீங்கலாக உள்ளாட்சித் தேர்தல் ) ஆகிய தேதிகளில் இருவேளைகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் நுழைவுச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( password ) உள்ளீடு செய்து 05.02.2022 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ளது. தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ணப்பிக்கும் போது பதிவேற...
Posts
Showing posts from February 5, 2022
- Get link
- X
- Other Apps
கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் . இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேசியத் தகுதித் தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்விலும் கணிதப் பாடத் தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள்தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடமிருந்து பறிக்கப்படும். இது அநீதியானது. தேசியத் தகுதித் தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ம் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ம் தேதிதான் வெளியானது. தேசியத் தகுதித் தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத் தேர்வை அறிவித்ததுதான் குழப்பங்களுக்கு கார...
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும்.. தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன்.. டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசு பணியாளர்கள், அலுவலர்களுக்கான துறைத் தேர்வு விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தைப் பார்வையிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில்: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் பணியாளர்கள் அலுவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பிப்ரவரி.1 முதல் 9ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் துறைத் தேர்வின் புதிய நடைமுறையாக பிப்ரவரி 1 முதல் 3 ஆம் தேதி வரை இணையவழி மூலம்...
- Get link
- X
- Other Apps
மே மாதம் குரூப் - 1 தேர்வு நடத்த திட்டம் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல் விழுப்புரம்:''குரூப் - 1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் கூறினார். விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான துறைத் தேர்வு பிப்., 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. எழுத்து தேர்வு தேர்வில் புதிய நடைமுறையாக 1 முதல் 3ம் தேதி வரை மற்றும் 7 முதல் 8ம் தேதி வரை கம்ப்யூட்டர் முறையில் ஆன்-லைன் தேர்வு நடத்தப்படுகிறது.மேலும், சர்வே மற்றும் வருவாய்த் துறைகளுக்கு எழுத்துத்தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 4 முதல் 6ம் தேதி வரை மற்றும் 9ம் தேதிகளில் எழுத்துத்தேர்வும் நடக்கிறது. ஓராண்டாக விடைத்தாள் முழுமையாக கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.தேர்வு எழுதுபவர்களுக்கும், விடைத்தாள் திருத்துபவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால், நேர்மையான முறையில் விடைத்தாள் திருத்தப்படுகிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி., மூலம் இந்தாண்டு 32 வகை தேர்வுகளை நடத்...
- Get link
- X
- Other Apps
பத்து ஆண்டுகளாக ஆசிரியர்கள் பரிதவிப்பு:டெட்., விலக்களிப்பதில் பாரபட்சம் கோவை:அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2012 நவ., மாதம் 16ம் தேதி வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் டெட்., தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினருக்கு மட்டும் விலக்களிப்பதில் இழுபறி நிலவுவதாக, அதிருப்தி எழுந்துள்ளது. மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை, 2010ல் அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டெட்.,) நடத்தப்படுகிறது.தமிழகத்தில் டெட்., 2011- 2012ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஆசிரியர் பணியில் சேர, இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகியது. இந்நிலையில், 2010ம் ஆண்டு முதல் நவ., 2012ம் ஆண்டு வரை, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற, 10 ஆயிரம் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில், பணியை தொடர அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரசு பள்ளிகளில் சேர்ந்தவர்கள், அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் டெட்., நிபந்தனை ரத்து செய்யப்பட்டு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்ப...