11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த வலியுறுத்தல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வை ரத்துசெய்யக் கூடாது எனத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பொதுத்தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் வேதனையான செயலாகும். கல்வியைக் கேள்விக்குறியாக்கும் நிலை. இனி உள்ள இரண்டு மூன்று மாதங்களும் பாடமே நடத்தாமல் அப்படியே விட்டுவிடுவதற்கான திட்டமாகத் தெரிகிறது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலா...
Posts
Showing posts from February 4, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் ஓய்வு பெற இருப்போரின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி துறை உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில் 2024-ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற இருப்போரின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களில், 2024 செப்.30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளவா்களின் விவரங்களை அறிக்கையாகத் தொகுத்து, இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு : 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும்!! புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 10ம்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதன்பின்னர், தொற்று குறையாத நிலையில், 10ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18ம் தேதி மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி நுழைவு வாயிலில் அனைவரையும் தெர்மா மீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.