முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வு ஆங்கிலம் , கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.02.2022 வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 - காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 15.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் 14 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என 28.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது . 19.02.2022 நீங்கலாக , 16.02.2022 முதல் 20.02.2022 வரை 4 நாட்களுக்குரிய ஆங்கிலம் , கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.02.2022 வெளியிடப்படுகின்றது . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்க...
Posts
Showing posts from February 3, 2022
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து?.. வெளியான புதிய தகவல்..!!!!! தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யலாமா..? என்பது தொடர்பாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டி இருப்பதால், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு ஆல்பாஸ் வழங்கலாமா அல்லது மாவட்ட அளவில் மதிப்பீட்டுத் தேர்வு மட்டும் நடத்தலாமா என்று ஆலோசித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயர்கல்வியில் மாணவர்கள் திணறும் நிலை...
- Get link
- X
- Other Apps
TN TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு தள்ளிவைப்பு?.. வலுக்கும் கோரிக்கை..!!!! தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்படாத காரணத்தால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதி வாரியாக தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றது. முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியமானது 29.01/2022 முதல் 06/02/2022 வரையுள்ள தேதிகளில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்த திட்டமிட்டது. ஆனால் அப்போது கொரோனா பரவல் அச்சம் அதிகரித்து வந்ததால் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அந்த நாட்களில் ஆசிரியர் முதுகலைக் கல்வியியல் தேர்வுகள் நடக்க உள்ளதாக தெரிவி...
- Get link
- X
- Other Apps
விழுப்புரத்தில் பரபரப்பு!! ஆசிரியருக்காக போராட்டத்தில் குதித்த மாணவர்கள், பெற்றோர்கள்!! தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி நெகனூர் புதூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு நடுநிலைப் பள்ளியில் 100 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 1 தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியர் சமீபத்தில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதுவரை மாற்று ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், பாடங்களை கற்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மாற்று ஆசிரியரை நியமிக்கவும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாற்று ஆசிரியர் நியமிக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார். இதன் பின்னர் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.