காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது. தமிழக காவல்துறையில் காவலர்கள், உதவி ஆய்வாளர் போன்ற பணியார்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்தி வருகிறது.. எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவர் பரிசோதனை ஆகியவை மூலம் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.. இந்த நிலையில் இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.. அதன்படி, காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.. இந்த தகுதி தேர்வு நடத்தப்பட்ட பிறகு தான் எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.. தமிழ்த்தகுதி தேர்வும், எழுத்துத்தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும், தமிழ் தகுதி தேர்வில் கட்டாயம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்துத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்த் தகுதி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டு, எழுத்துத்தேர்வில் அதிக மத...
Posts
Showing posts from February 2, 2022
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவரும் பிப்.28க்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என்று TNPSC அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வுகளை எழுத ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை இதற்கான அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கா...
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளியில் 7 பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் சிவகங்கை:அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் கட்டாயம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது, உயர், மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிடும் போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு 7 பட்டதாரி ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிட வேண்டும். 2022 ஜன., 1 முதல் கணக்கிட்டு பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியலை தயாரித்து அதன்படி மட்டுமே உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யும் போது ஏற்கனவே பணி நிரவலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஆசிரியர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் இந்நடைமுறையை பின்பற்ற வேண்டும். இக்கோரிக்கையை கல்வித்துறை கமிஷனரிட...