Posts

Showing posts from January 31, 2022
  தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19இல் தொடங்க இருந்த நிலையில், கரோனா மூன்றாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளைமுதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையை மாற்றி தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதில், 10ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 - 15 வரை, 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 - ஏப்.4 வரை, 12ஆம் வகுப்பிற்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 - 16 வரை, 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 - ஏப்.5 வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image
  நாளை முதல்! அனைத்து பள்ளிகளிலும் முழு அட்டெண்டன்ஸ் தமிழகத்தில், 40 நாட்கள் விடுமுறைக்கு பின், நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து பள்ளிகளிலும் முழு 'அட்டெண்டன்ஸ்' பதிவாகும் வகையில், 100 சதவீதம் மாணவர்களை நேரடியாக வர வைத்து, பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவர்கள், ஊரடங்கு நீங்கியதால், பள்ளிக்கு வர சுறுசுறுப்புடன் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகத்தை பொறுத்து, அவ்வப்போது ஊரடங்கு விதிகளை அதிகரிப்பதும், தளர்த்துவதுமாக அரசு உத்தரவிட்டு வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக, இம்மாதம் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை, இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலாகின்றன. இது குறித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு இந்நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை சுழற்சி முறை என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் வகுப்பு நடத்தல...
Image
  புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: சிவா ஆசிரியர் படிப்பு முடித்து, ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி அரசில் ஆசிரியர் பணிக்கு, மத்திய அரசு நடத்தும் 'சி -டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.தற்போது தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.இருப்பினும், அதில் எடுக்கும் மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் தரப்படாது, தகுதியாக மட்டுமே கருதப்படும் எனவும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் பணிக்கு என படித்துவிட்டு, பின்னர் அதற்கான தகுதித் தேர்வையும் எழுதி வெற்றி பெற்றாலும் பணி வழங்கப்படாது என்றால் எதற்கு அந்தத...