Posts

Showing posts from January 26, 2022
  TNPSC - தேர்வு முடிவுகள் அறிவிப்பு. தமிழக அரசு துறைகளின் காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய நான்கு தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: * தமிழக தடய அறிவியல் சார்நிலை பணிகளில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 72 காலியிடங்களை நிரப்ப 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது; 8851 பேர் இதில் பங்கேற்றனர்.இந்த தேர்வு முடிவின்படி ஏற்கனவே 65 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள ஏழு இடங்களுக்கு வரும் 15ல் நேர்முக தேர்வு நடக்கிறது. இதில் 21 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் * தமிழக பொதுப்பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியில் 50 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவ.6ல் தேர்வு நடந்தது. இதில் 4047 பேர் பங்கேற்றனர்.இந்த பணிக்கான முதன்மை தேர்வு இந்தாண்டு மே 6 7ல் நடக்க உள்ளது. இதில் 570 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் * வேலைவாய்ப்பு பயிற்சி பணியில் முதல்வர் மற்றும் உதவி இயக்குனர் பதவியில் ஆறு காலியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலை பணி...
Image
  TRB வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விளக்கம்.   வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கம் அளித்தார். 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு, இடைநிலை மற்றும் பட்டதாரி தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு உட்பட 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் அவற்றுக்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்ட தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. முன்பு வெளியிடப்பட்டிருந்த சிற...
  10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை - அமைச்சர் அன்பில் மகேஷ்  பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிந்துரை செய்துள்ளார்.
  பொது தேர்வு ஏற்பாடு பிப்., 1ல் ஆலோசனை தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக, சி.இ.ஒ.,க்களான முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், வரும் 1ம் தேதி சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில், பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் ஆகியவை குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க., ஆட்சி வந்தபின், மாதம் தோறும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதன்படி, பள்ளிகள் திறப்பு; ஆன்லைன் வழி பாடங்கள்; 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, வரும் 1ம் தேதி சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான சுற்றறிக்கை, பள்ளி கல்வி கமிஷனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் வழியே, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொது தேர்வுக்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரம், ஒற்றை இலக்கத்தில் ம...