Posts

Showing posts from January 22, 2022
  மின் வாரிய தேர்வு நடக்குமா? 2 ஆண்டாக 2 லட்சம் பேர் காத்திருப்பு! சென்னை:உதவி பொறியாளர் உட்பட மூன்று பதவிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பம் பெற்று, இரு ஆண்டுகளாகியும் தேர்வு நடத்தாத நிலையில், அரசின் புதிய அறிவிப்பால், மின் வாரிய தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேலைக்காக 2 லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.தமிழக மின் வாரியத்தில், 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், 600 உதவி பொறியாளர்; 500 இளநிலை உதவியாளர் - கணக்கு; 1,300 கணக்கீட்டாளர் என 2,400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. குழப்பங்கள் அந்த ஆண்டின் பிப்ரவரி, மார்ச்சில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உதவியாளர் கணக்கு பதவிக்கு 32 ஆயிரம் பேர்; கணக்கீட்டாளர் பதவிக்கு 79 ஆயிரம் பேர்; உதவி பொறியாளர் பதவிக்கு 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பொது பிரிவினரிடம் 1,000 ரூபாயும்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினிரிடம் 500 ரூபாயும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. கொரோனா முதல் அலையை தடுக்க, அந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு நடத்தப்படவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள்