Posts

Showing posts from January 21, 2022
  தமிழகம் முழுவதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!!! தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் காரணமாக தினசரி பாதிப்பு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் திறனானது பாதித்து இருப்பதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதுபவர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்த வகையில் அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலம் கற்றல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்...
  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. அவ்வாறு பணியாளர் நிர்ணயம் 2021-2022ம் கல்வியாண்டிற்கான 1.8.2021 அன்றுள்ள நிலவரப்படி அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இக்கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி 6 முதல் 8ம் வகுப்புக்கு 1:35 என்ற விகிதாச்சாரத்தின்படியும், 9 முதல் 10ம் வகுப்புக்கு 1:40 என்ற விகிதாச்சாரத்தின்படியும் கூடுதல் ேதவையுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்ட...
  மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் : கல்வி அதிகாரிகள் தகவல் அடுத்த கட்ட படிப்பைத்தொடர மதிப்பெண் பட்டியல் அவசியம் என்பதால், 10 மற்றும் 12ம் வகுப்புக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், கடந்த இரு கல்வியாண்டிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.அரசின் 'ஆல்பாஸ்' அறிவிப்பால், மாணவர்கள் அனைவரும் அடுத்த கட்ட படிப்பை தொடர்ந்தும் வருகின்றனர். அதன்படி, 2019-20ம் கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் வழங்கப்பட்டது.அதேபோல், 2020-21ம் கல்வியாண்டு, மதிப்பெண் பட்டியல் அளிக்கப்படாமல், 'தேர்ச்சி' என்ற சான்று மட்டும் அளிக்கப்பட்டது. அவ்வகையில், இரு ஆண்டுகளாக, எந்தவொரு தேர்வையும் முறையாக எழுதாத மாணவர்களே, தற்போது, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் உள்ளனர்.அவர்கள், அடுத்த கட்ட படிப்பைத் தொடர மதிப்பெண் பட்டியல் அவசியம் என்பதால், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்...