Posts

Showing posts from January 20, 2022
  பள்ளிகளைத் திறக்க வேண்டும் - தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கோரிக்கை தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர்வாகிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் வருகின்ற ஜன.31ஆம் தேதி கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜன.19) ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜன.31ஆம் தேதி வரை 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று (ஜன.20) தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதன் பின்னர் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அடிப்படை எழுத்துக்களையே ...