Posts

Showing posts from January 17, 2022
  பள்ளிகளை மூட வேண்டாம் உலக வங்கி வலியுறுத்தல் 'கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை,'' என, உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறினார். கடைசி முயற்சிஉலக வங்கியின் சர்வதேச கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறியதாவது:உலகம் முழுதும் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை; அது, கடைசி முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். பள்ளிகளில் தொற்று பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க அனுமதித்து விட்டு, பள்ளிகளை மட்டும் மூடுவது நியாயமல்ல. கடந்த 2020ல் கொரோனா பரவிய போது நம்மிடம் அதுகுறித்த புரிதல் இல்லை. அதனால் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூடினோம். வலியுறுத்தல்இப்போது நிலைமை அப்படி இல்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என எந்த நாடுமே வலியுறுத்தவில்லை.பள்ளிகள் மூடப்படுவதால் இந்தியாவில் கற்றல் வறுமை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
  தமிழகத்தில் 31-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா?.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு கொரோனா அதிகரித்து வருவதால் மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வருவதால் முதலில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை இதன்பிறகு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகள் விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் மாணவ-மாணவிகளுடன் க...
  அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம் அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.அதன் விபரம்:ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும். இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வே...
  10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்கிறது தமிழக காவல் துறை; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது: தகுதியுள்ள இளைஞர்கள் தயாராகுமாறு அதிகாரிகள் அறிவுரை தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் கரோனா காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களை தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழக காவல் துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2021 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழககாவல் துறைக்கு 1 லட்சத்து 33,198போலீஸார் அரசால் ஒப்பளிக்கப்பட்டது. ஆனால், 1 லட்சத்து 18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதற்கிடையில், க...
  புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு? ... பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, பள்ளிகளுக்கு கடந்த 10ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.அவ்வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.தற்போது பத்தாம் வகுப்பு , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கி வருகின்றன.பத்தாம் வகுப்பிற்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், பிளஸ் 2 வகுப்பிற்கு 19ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளுக்கு ஜன., 31ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும், ஜன., 19ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் புது...