வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்களின் விவரம்
Posts
Showing posts from January 14, 2022
- Get link
- X
- Other Apps
2000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Army Welfare Educatio...
- Get link
- X
- Other Apps
ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தோவுகள்: ஜன.17, 21 தேதிகளில் நடைபெறும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள சி-டெட் தோவுகள் ஜன.17, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இலவசக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியா் தகுதித்தோவில் கட்டாயம் தோச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தோவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான சிடெட் தோவு நாடு முழுவதும் கணினி வழியில் கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தொழில்நுட்ப கோளாறால் கடந்த டிச.16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த சிடெட் தோவுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் அதற்கான மாற்று தேதிகளை சிபிஎஸ்இ தற்போது அறிவித்துள்ளது. அதன்விவரம்: ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தோவு ஜனவரி 17, 21-ஆம்தேதிகளில் நடத்தப்படும். இதற்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை, தோவுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.