பணி நியமன தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு - TNPSC தலைவர் அறிவிப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு TNPSC தேர்வுகள் தள்ளிப் போகிறது : தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ,ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வரும் 8 ம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கு 9 ந் தேதியும்,தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22 ந் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்ச...
Posts
Showing posts from January 5, 2022
- Get link
- X
- Other Apps
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு , பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வில் 30 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையிலும் பாடத்திட்டத்தை குறைத்துள்ளோம் என்றும், இதற்கு மேலும் இது குறைக்கப்படமாட்டாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பழைய கட்டிடங்களை இன்ம் கொண்டு அதை இடிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வில் 30 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையிலும் பாடத்திட்டத்தை குறைத்துள்ளோம் ...
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்வதற்குத் தமிழ் மொழியில் தகுதி பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில், பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.மேலும், தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் முறையில் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிரிவ...