Posts

Showing posts from January 3, 2022
  தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் ஒரே நாளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு பாடங்களை நடத்திவிட்டு மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன. ஆனால், உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதுதவிர தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இவற்றைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017-18-ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்தத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆக குறைத்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படியே உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் ...
  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல் கும்பகோணத்தில் உள்ள ஏஐடியூசி கூட்ட அரங்கில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இளங்கேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் சேலம் பாரதி துவக்க உரையாற்றினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநில துணைச் செயலாளர் துரை.அருள்ராஜன் பேசினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இளங்கேஸ்வரன், துணைத்தலைவர் குருமூர்த்தி, மாவட்டச் செயலாளர் திவான், துணைச் செயலாளர் சதீஸ், பொருளாளர் தழிழரசன் உள்ளிட்ட 19 இளைஞர்களை கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. பேரவை கூட்டத்தில், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை பரிசீலனை என்ற பெயரில் நீண்ட காலமாக கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுனர், சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளித்தும், தமிழக...