ஜெ. பழி வாங்கினார்! ஸ்டாலின் காப்பாற்றுவாரா? - கண்ணீர்விடும் பட்டதாரி ஆசிரியர்கள்! - நக்கீரன் இதழ் தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்ற காரணத்தாலேயே கடந்த பத்தாண்டு களாக அ.தி.மு.க. அரசாங்கத்தால் பழி வாங்கப்பட்டுள்ளோம்'' என்று வேதனைப் படுகிறார்கள் பட்டதாரி ஆசிரியர்கள். 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்காக பதிவுமூப்பு அடிப்படையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 2,000 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணி நியமன ஆணையை வழங்கினார் அப்போதைய முதல்வர் கலைஞர். மீதமுள்ளவர்களைப் பணி நியமனம் செய்வதற்குள் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நியமனம் தள்ளிப்போனது. அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதும், "பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது இனிமேல் செல்லாது என்றும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு முறைப்படிதான் தேர்வு செய்யப்படும்' என்றும் அறிவித்து, பட்டதாரி ஆசிரியர்களின் தலையில...
Posts
Showing posts from January 2, 2022