கலைஞர் ஆட்சியில் 2010ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விடியல் தருவாரா? தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் நன்றி நக்கீரன் இதழ்
Posts
Showing posts from January 1, 2022
- Get link
- X
- Other Apps
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியருக்கு 'விடியல்' கிடைக்குமா? திருப்பூர்:தமிழக முதல்வர் அறிவித்தபடி இப்புத்தாண்டிலாவது பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் பகுதி நேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 2012ம் ஆண்டு, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் பாடங்களில், 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டு, 10 கல்வி ஆண்டுகள் கடந்த விட்டன. தற்போது, 12 ஆயிரத்து, 483 பேர் ரூபாய் பத்தாயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர்.பகுதி நேரமாக அறிவிக்கப்பட்ட போதும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை காரணமாக, கற்பித்தல் மற்றும் அலுவலக பணிக்களுக்கு இவ்வாசிரியர்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றனர்.இருப்பினும் குறைந்தபட்சம் ஊதியமே வழங்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தொழில் கல்வி ஆசிரியர்கள், நிரந்தரம் செய்ததை போலவே பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் . .தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரிய...