உதவி பேராசிரியர் பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., நடத்த கோரிக்கை
அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பதில், டி.என்.பி.எஸ்.சி., வழியே நடத்த வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, &'நெட், செட்&' என்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலர் தங்க முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பதவிக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் எழுத்து தேர்வு நடத்த முடிவெடுத்து உள்ளதை வரவேற்கிறோம்.
அதே நேரம், இந்த தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,க்கு பதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே நடத்த வேண்டும்.எழுத்துத் தேர்வில், 50 சதவீத விரிவான விடைக்கு பதில், 30 சதவீதமாக மாற்றி நடத்த வேண்டும்.
மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும். நேர்காணலை, வீடியோ பதிவு செய்ய வேண்டும்.அரசு கல்லுாரிகளில் புதிதாக, 1,895 கவுரவ விரிவுரையாளர்களை சொற்ப ஊதியத்தில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இது, யு.ஜி.சி., விதிகளை மீறிய செயல்.தற்போது, இந்த நியமனத்தை மேற்கொள்வதால், உதவி பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடத்தி, முறையாக நியமனம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அண்ணாமலை பல்கலையில் நியமிக்கப்பட்ட உபரி பேராசிரியர்களை, மற்ற அரசு கல்லுாரிகளில் நிரந்தரமாக பணி அமர்த்தும் திட்டம் இருந்தால், அதை உயர்கல்வித் துறை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment