தனியாரிடம் அரசு பணிகளை ஒப்படைக்கும் அரசாணை: ரத்து செய்ய சங்க நிர்வாகிகள் கோரிக்கை
தனியாரிடம் அரசு பணிகளை ஒப்படைக்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் 'டி' பிரிவு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய சங்க தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கவுரவ தலைவர் எஸ்.வெங்கடேசலு, பொதுச்செயலாளர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:
தமிழகத்தில் ஏழை, எளிய, மிகவும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் குழந்தைகள் வேலைவாய்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இதுபோன்ற லட்சோப லட்சம் இளைஞர்களின் கனவை பொய்பிக்கும் வகையில் தற்போது டி மற்றும் சி பிரிவு பணியாளர்களை தனியார்மயம் ஆக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment