போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களை பெண் என்றும் பாராமல் கைது செய்த தி.மு.க அரசு
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணை 149 ஐ ரத்து செய்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில்அரசானை 149 ஐ ரத்து செய்ய வேண்டும் .
2013 ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை நேற்று மாலைடன் நிறைவு செய்து திரும்ப வேண்டி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இது எடுத்து அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்திய. 100- க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments
Post a Comment