ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கூறிய போராடிய 300 பட்டதாரி ஆசிரியர்களை கைது செய்த தி.மு.க அரசு
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க கோரி சென்னையில் போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் நேற்று போராட்டம். நடந்தது பல்வேறு மாவட்டங்களில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், வேலை கேட்டு போராடிய அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ரத்தினகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதவி நியமனம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 2000 பி.எட் மற்றும் 1500 டி.டி.எட் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் உடனடியாக வயது வரம்பின்றி கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
கடந்த 2010 ஆகஸ்ட் 23'க்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் அல்லது பணி நியமன வேலை துவங்கியிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு என்ற அறிவிப்பை பின்பற்ற வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன தி.மு.க அரசு கோரிக்கை நிறைவேற்றாமல் உள்ளதால் முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்' என கூறினார்.
Comments
Post a Comment