2000 அரசு பணியிடங்களில் விரைவில் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர் உறுதி!
புதுச்சேரியில் 2,000 அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கூறியிருக்கிறார்.
புதுவையில் 2,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அவை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் ரங்கசாமி அரசு முறை பயணமாக மாகி சென்று உள்ளார்.
அங்கு கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தொடர்ந்து 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் குத்துவிளக்கு ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்பொழுது அவர் பேசுகையில் நான் கடந்த காலங்களில், முதலமைச்சர் ஆக இருந்த பொழுது மாதியை சேர்ந்த ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் என்னுடன் ஒரு கருத்தோடு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் அவரது பங்கு அதிகமாகவே இருந்தது.
சுகாதாரத் துறையில் அவர் நிறைய சென்று இருக்கிறார். கடந்த தேர்தலின் போது அவர் எண்ணார் காங்கிரஸ் வந்திருந்தால் இப்போது அமைச்சராகி இருப்பார் என்று கூறினார். மேலும் வாங்கிய மூன்று திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
அதாவது மீன்பிடி துறைமுக பணி 90% முடிந்து விட்டது. அரசு ஆஸ்பத்திரியில் யூனிட் மற்றும் நடைபாதை பணிகள் விரைவில் முடிக்கப்படும். புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்துள்ளது.
விரைவில் 2,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. கூட்டுறவில் வேலை வாய்ப்பு தர முடியும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு இரண்டு புள்ளி ஐந்து இரண்டு கோடி ஒதுக்கி தர இருக்கிறோம்.
எனவே இந்தியா முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதன் பணியில் அதன் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிறுவப்படும் என்
Comments
Post a Comment