10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைப் பயிற்சி.. தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்



பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் நவ.15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாவட்டக் கல்வி அலுலவலகங்களில் அறிவியில் செய்முறைப் பயிற்சி எழுதுவதற்குப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுவராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில், '2022-23ஆம் கல்வியாண்டில் 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே 2012ஆம் ஆண்டிற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம். 


அனைத்து தனித்தேர்வர்களும் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றப் பின்னரே தனித்தேர்வர்கள் எழுத்துத்தேர்வு என்ற கருத்தியல் தேர்வுக்கும் அனுமதிக்கப்படுவா்.


பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பம் செய்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிக்குச்சென்று 80% பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படித்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog