கல்லூரிகளில் புதிதாக பயிற்சி பேராசிரியர் பணி: யுஜிசி அனுமதி



 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


உயர்கல்வி நிறுவனங்களில் கல்விசார் துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சி பேராசிரியர்’ (Professor of Practice) என்ற புதிய பணியிடம் உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


இந்த பயிற்சி பேராசிரியர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பயிற்சி பேராசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பல்துறை கல்வியை கற்று தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog