தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு... அமைச்சர் பொன்முடி தகவல்..!!!!!
சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் போன்ற பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 23 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 1,53,323 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. இதில் தற்போது வரை 1,13,171 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக தான் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசமானது நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நவம்பர் 23-ம் தேதி துணை வேந்தர்களுடன் ஆய்வுக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு கலை மற்றும் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு தமிழகம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது 14 கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இது 7 கல்லூரிகளை தற்போது நாங்கள் கட்டி வருகிறோம். இதனையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டதுள்ளதால் செமஸ்டர் தேர்வை தாமதமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டியன் இறுதியில் செமஸ்டர் தேர்வினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.
Comments
Post a Comment