4000 கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள்.. விரைவில் டிஆர்பி தேர்வு.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!!!!





தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.



அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர். தகுதி வாய்ந்த 1895 கௌரவ விரிவுரையாளர்களை தேர்வு மூலம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog