புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட செவிலியர் அதிகாரி பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுவையில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது அங்கே காலியாக உள்ள 443 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது இந்த பணியில் தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 433
பொதுப் பிரிவு -175, இ டபிள்யு எஸ்-43, ஓபிசி-116, எஸ்சி- 66, எஸ்டி 33 என்று மொத்தமாக 433 செவிலியர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி
பிஎஸ்சி நர்சிங் மற்றும் டி ஜி எல் எம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பணி அனுபவம்
டி ஜி என் எம் முடித்தவர்கள் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயதுவரம்பு
18 வயது முதல் 35 வயது வரையில் இருப்பவர்களாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் வயதுவரம்பில் ஓபிசிக்கு 3 வருடங்களும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை
எழுத்து தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் விதம் 100 கேள்விகள் கேட்கப்படும், 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். செவிலியர் பாடப்பிரிவிலிருந்து 70 கேள்விகளும் பொது அறிவு பொது நுண்ணறிவு ஆங்கிலம் கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவில் 30 சதவீதம் கேள்விகளும் கேட்கப்படும்.
செவிலியர் அதிகாரிகள் பணிக்கு வரும் 7ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 1ம் தேதி வரையில் ஜிப்மர் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் ஜிப்மர் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் முறையில் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு
ஜிப்மர் இணையதள முகவரி www.jumper.edu.in
Comments
Post a Comment