பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
2022 - 2023ஆம் கல்வியாண்டில் 254 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்து பிறப்பித்து, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட 2022- 2023ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்ந்த கருத்துருக்களின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் ஆசிரியர் இன்றி உபரியாகக் கண்டறியப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக் கல்வி ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு, ஆணை வழங்கப்பட்டது.
அவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு (தமிழ் - 33, ஆங்கிலம்- 2, கணிதம் - 54, இயற்பியல் - 50, வேதியியல் - 58, வரலாறு - 18, வணிகவியல்- 4, பொருளியல் - 38) அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
Reels
புதியதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் (50216 621502) பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான பட்டியலைக் காண
தமிழகத்தில் உயர் கல்வித்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. 2020- 21ஆம் ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் - 271, ஆங்கிலம் - 192, கணிதவியல் - 114, இயற்பியல் - 97, வேதியியல் - 191,விலங்கியல் - 109,தாவரவியல் - 92, பொருளாதாரவியல் - 289, வணிகவியல் - 313, வரலாறு - 115, புவியியல் - 12,அரசியல் அறிவியல் - 14, வீட்டு அறிவியல் - 3, இந்திய கலாச்சாரம் - 3, உயிர் வேதியியல் -1, உடற்கல்வி இயக்குநர் (நிலை1) - 39, கணினி பயிற்றுவிப்பாளர் - 44 என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியானது.
கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ரூபாய் 36,900 முதல் ரூ.1,16,600 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதிகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள்
2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பழைய காலிப் பணியிடங்கள் 247 இருந்த நிலையில், தற்போதைய காலிப் பணியிடம் 1,960 என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பழைய காலிப் பணியிடங்கள் 269 ஆக அதிகரிக்கப்பட்டன. அதேபோல தற்போதைய காலிப் பணியிடங்கள் 2968 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த காலியிடங்கள் 3,237 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment