TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா. முதன்மைத் தேர்வுத இப்படி தான் இருக்கும்



தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதனிலை தேர்வு முடிவுகள் வரும் தேதியில் இருந்து குறைந்தது 3 மாதத்திற்குள் அதன் முதன்மைத் தேர்வு வந்து விடும். இன்று வரை ஏதும் தயார் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இப்போதிருந்து ஆரம்பியுங்கள்.


முதன்மை தேர்வின் பேட்டன் என சொல்லப்படும் வரைமுறைகளை முதலில் தெரிந்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.


முதன்மைத் தேர்வு 2 தாள்களாக நடக்கும்.


தாள் 1: கட்டாயத் தமிழ்


மொழிபெயர்த்தல் :

(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்



(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்


சுருக்கி வரைதல்


பொருள் உணர்திறன்


சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்


கட்டுரை வரைதல் : திருக்குறள் தொடர்பாக


கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது)



தமிழ் மொழி அறிவு ஆகியவை அடங்கும் அடங்கும


இந்த தாள் 100 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த தாளில் குறைந்தது 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் தாள் 2 ஐ மதிப்பீடு செய்வார்கள். இல்லையேல் மதீப்பீட்டிற்கு கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.


தாள் 2 பொது அறிவு: இளநிலை கல்வி தரத்தில் இருக்கும்


இந்த தாளில்,


தற்கால நிகழ்வுகள்


சமுதாயப் பிரச்சனைகள்


சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்


இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்


அறிவியலும் தொழில் நுட்பமும்


கலையும் பண்பாடும்


பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.


இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.



தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு - இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு ஆகியவை அடங்கும்.



இந்த தாள் 300 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் நடைபெறும். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு இந்த தாளில் குறைந்தது 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். நேர்முகத்தேர்வு உள்ள பதவிகளுக்கு 40 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். அதோடு சேர்த்து குறைந்தது 103 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog