MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு.



நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு அக். 20 வரை நடைபெறும்.


அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம்.


மருத்துவக் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள், அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றுவிட வேண்டும். இதுபோல, 


அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதுபோல, மாநிலங்களுக்கான 2அம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி 18ஆம் தேதி வரை நடைபெறும்.


இந்த மருத்துவக் கலந்தாய்வுகளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள்ளும், மாநிலங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுவிட வேண்டும்.


இதன்பிறகு, காலியாக இருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறும்.


நாடு முழுவதும் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog