ஒன்றல்ல, இரண்டல்ல.. 4000 காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்..!



தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவரிடம், அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த அவர், "அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.


கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் மொத்தமே 30 மதிப்பெண்கள்தான். இதில், ஓர் ஆண்டு கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வீதம், 7.5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


எனவே, கவுரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதமாக இந்த 15 மதிப்பெண்கள் நீங்கள் பணிகளைப் பெற வேண்டும் என்பதற்காக ஒதுக்கியிருக்கிறோம்" என்று கூறினார்.

Comments

Popular posts from this blog