`முதல்வர் ஸ்டாலினிடம் பிச்சை கேட்கிறோம்; வேலை கொடுங்கள்'- உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியைகள் கண்ணீர்
முதல்வர் ஸ்டாலினிடம் பிச்சை கேட்கிறோம். எங்களுக்கு வேலை கொடுங்கள்'' என்று டெட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 2013-ல் நடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும். அதன்படி கடந்த 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை பிஎட் முடித்தவர்கள் எழுதினார். இதில் 30 ஆயிரம் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் இவர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை.
இதனிடையே, டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும் என்று தமிழக அரசு திடீரென அறிவித்தது. இதற்கு டெட் தேர்வு தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 38 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த போராட்டத்தின்போது, தங்களுக்கு உடனே தமிழக அரசு பணி வழங்க வேண்டும் என்றும் மீண்டும் தேர்வு எழுதும் விதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும் என்று தமிழக அரசு திடீரென அறிவித்தது. இதற்கு டெட் தேர்வு தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 38 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த போராட்டத்தின்போது, தங்களுக்கு உடனே தமிழக அரசு பணி வழங்க வேண்டும் என்றும் மீண்டும் தேர்வு எழுதும் விதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள தஞ்சாவூரை சேர்ந்த நித்யா என்ற ஆசிரியை கூறுகையில், "இங்கு போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரும் டெட் தேர்வில் தேர்வு தேர்ச்சி பெற்று கடந்த 10 வருடங்களாக மிகவும் மன விரதத்தில் இருக்கிறோம். எங்களை பெற்றோர்கள் படிக்க வைத்தது நல்ல ஒரு அரசு வேலைக்குதான். எங்கள் பெற்றோருக்கும் வயதாகிக் கொண்டு செல்கிறது. அவர்களும் சாகும் வயதை நெருங்கி விட்டனர். ஆனால் எங்களுக்கு இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு ஒரு கடவுள் மாதிரி இருந்து நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று போராட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். நாங்கள் முதல்வரிடம் ஒரு பிச்சையாக கேட்கிறோம். எங்களுக்கு வேலை கொடுங்கள். அவர்களின் பாதங்களை தொட்டு நாங்கள் நன்றி சொல்கிறோம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
Comments
Post a Comment