இல்லம் தேடிக் கல்வி... தன்னார்வலர்களுக்கு விருது!
சேலம் மாவட்டம் முழுவதிலும் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள் உட்பட 662 பேருக்கு பாராட்டி மாநில அளவிலேயே முதன் முதலாக முப்பெரும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
முப்பெரும் விருது விழா
இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழ்நாடு அரசு துவக்கி வைத்தது. இதனிடையே சேலம் மாவட்டம் எப்பபாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள மூலப்பாதை ல் கல்லூரியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதிலும் சிறப்பாக பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 662 பேருக்கு மாநில அளவிலேயே முதன்முதலாக கொங்கணாபுரம் டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் பாராட்டி முப்பெரும் விருது வழங்கும் விழா மாவட்ட உதவி திட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
இந்நிகழ்ச்சியில் புது டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான நாராயணி சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் கேடயங்களுடன் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 62 ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாக பணியாற்றிய 300 பேர், மிகவும் சிறப்பாக பணியாற்றிய 300 பேர் என மொத்தம் 662 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குநர் சுப்பிரமணி, மாவட்ட ஊடகவியலாளர்கள் விஜயகுமார், சக்திவேல், டார்வின் சயின்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் செல்வராசு, மகேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment