விழுப்புரம் வட்டத்தில் உள்ள 7 கிராம உதவியாளர் களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் தகவல்.
தமிழக முழுவதும் கிராம உதவியாளர்களுக்கான 2748 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப் பணிக்குநேற்று முதல் விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ வருவாய்த்துறை இணையதளம் விண்ணப்பிக்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது எனவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியுள்ளதாவது:-
விழுப்புரம் வட்டத்தில் 7 கிராமத்தில் கிராம உதவியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியினை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
1.விழுப்புரம் வட்டத்தில் அற்பிச்சப் பாளையம் கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர்பணியிடத்திற்கு பொதுப் பிரிவு பெண்கள் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமைற்றது)
2.ஆழியூர் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு எஸ்.சி.பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமை)
3 கண்டமங்கலத்தில் ஒரு காலி பணியிடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்விண்ணப்பிக்கலாம்.(டி.என்.டி)முன்னுரிமை பொது
4.கலிஞ்ச்குப்பத்தில் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு பின் தங்கிய வகுப்பினர்விண்ணப்பிக்கலாம் (பொது)
5.கெடார் கிராமத்தில் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமையற்றது)
6.கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (முன்னுரிமை அற்றது)பெண் விண்ணப்பிக்கலாம்
7.பில்லூர் கிராமத்தில் உள்ள காலி பணி இடத்திற்கு பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி 10.10 2022 கடைசி நாள் :07-11-2022 . முறை ஆஃப்லைன் அதிகாரப்பூர்வமான இணைய தளம் https,//w.w.w .tn.gov.in
மேலும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரப்பூர்வ இணையதளம்
https://villupuram.nic.in
என்ற முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
இப்பணிக்கான கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் ,அவர்களுடைய
காலி பணியிடங்கள் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வயதுவரம்பு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும் இது அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்.அதிகபட்சமாக
பொதுப் பிரிவினருக்கு 32வயதும்மற்ற பிரிவினர்களுக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் ரூ11,110/-ரூ 35100/=
எழுத்து மற்றும் படித்தல் திறன் தேர்வு:30.11.2022நடைபெறும் அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு 15.12.2022 மற்றும்16.12.2022 நடைபெறும்.
மேலும் இந்த அறிய வாய்ப்பினை நமது வருவாய் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Comments
Post a Comment