மருத்துவ படிப்புக்கு36,100 பேர் பதிவு
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் செப்., 12ல் துவங்கியது.
நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் முடிந்தது.
இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் உட்பட, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பங்கள் பரிசீலனை, இன்று துவங்குகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment