2,748 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது...   விண்ணப்பிப்பது எப்படி?



கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுளளது.


அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 07ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.


அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். 01-07-2022 தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்; காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையே சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்திருப்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்படலாம்.


விண்ணப்பம் செய்வது எப்படி? 


Online Application for the Post of Village Assistant என்ற இணையதளத்திற்கு செல்லவும்


விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது புகைப்படம்,கையொப்பம், கல்வித் தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ், சாதிச் சான்றிதழைப் பதிவேற்றவம் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் pdf-ல் 256 kb-க்குள் இருக்க வேண்டும்.


இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெரிவு செய்யப்படும் முறை: தாலுகா அளவில் துணை கலெக்டர் கண்காணிப்பில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்.


வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்.

Comments

Popular posts from this blog