டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்!
கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் இடஒதுக்கீட்டில் என்ன மாற்றம்?
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 இடங்கள் நிரப்பப்படும்போது, பொதுப்போட்டிப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும்; மீதமுள்ள 70% இடங்களில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் போட்டியிட முடியும்.
மகளிருக்கு முதலில் 30% இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 70% இடங்களிலும் போட்டியிட அவர்களை அனுமதிப்பது ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களிலும் போட்டியிட அனுமதிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து இந்த புதிய முறையை அனைத்து அரசு தேர்வு வாரியங்களிலும் பின்பற்றப்படும் என்பதால், இந்த புதிய ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதி பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும், தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள விரும்புவோர், அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Comments
Post a Comment