பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு புதிய தேர்வு மைய பட்டியல் தயாரிக்க உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் (2022-23) 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துருகளை அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டத்தில் 10 கி.மீ தூரம் வரை சென்று தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், தேர்வு மையம் தேவை என்பதற்கான காரணத்தை பள்ளிகளும் பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளிகள் வழங்கும் கருத்துகளை தேர்வுத் துறைக்கு வழங்குவதுடன், இதற்கான அறிக்கையை அக்டோபர் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment