நவ 12, 13ம் தேதிகளில் தட்டச்சுத்தேர்வு - தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம் அறிவிப்பு..
நவம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
தட்டச்சு தேர்வு நடத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உத்தரவிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே 2021-ல் புதிய முறைப்படி நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை வருகிற நவம்பர் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என அரசு தொழில்நுட்ப கல்வித்துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 14-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் அரசு தொழில்நுட்பத்துறை கல்வி இயக்ககம், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. அதன்படி விரைவாக தட்டச்சு செய்யும் முதல் தாள் இரண்டாவதாகவும், அறிக்கை தட்டச்சு செய்யும் இரண்டாவது தாள் முதலாவதாகவும் நடத்தப்பட உள்ளது.
Comments
Post a Comment