TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான கட் ஆப் எவ்வளவு? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் கட் ஆப் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
குரூப் 4 & VAO தேர்வு
தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது பணிகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான 2, 2A தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் வரி தண்டலர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கான குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது.
இந்த குரூப் 4 & VAO தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் போட்டி தேர்வு கடினமாக இருக்கும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் வினாத்தாள் சற்று கடினமாகவே இருந்தது. அதாவது தமிழ் பகுதி எப்போதும் போல் வினாக்கள் இருந்தது.
ஆனால் பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும், விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் வினாக்கள் மிக எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்வு முடிந்து 2 மாதங்கள் வரை ஆன நிலையில் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதனால் தேர்வெழுதியவர்கள் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கட் ஆப் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதில் கல்வி நிபுணர்கள் கூறியதாவது கடந்த முறை தேர்வுகளில் ஆங்கில தாள் எடுத்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, அதன் காரணமாக தான் தேர்ச்சி பெற்றிருந்தோர் விகிதமும் அதிகமாக இருந்து வந்தது. ஆனால், இந்த முறை தமிழ் தாள் கட்டாயமாக்கப்பட்டதால், ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழில் படிக்க சிரமப்பட்டிருப்பார்கள். அப்படியாக இருக்கும் போது, அதிக அளவில் போட்டி குறைந்து இருக்கும். இந்த காரணத்திற்காக கூட கட் ஆப் குறைய வாய்ப்புகள் இருப்பதாக கல்வி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
Comments
Post a Comment