TNPSC: வரும் 14-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்.! தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!
சேலம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி புள்ளியியல் ஆய்வாளர், கணக்கிடுபவர் மற்றும் புள்ளியியல் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14:10.2022 ஆகும். இதற்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 29.01.2023 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக 30.09.2022 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 0.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தலைவர் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment