NEET 2022 Result: நீட் தேர்வில் 35% அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி: இந்த மாவட்டத்தில் 7% மட்டுமே- வெளியான புதுத் தகவல்!



நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக புதிய விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.



2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத 17,572 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த 12,840 மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி ( 35% )அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரத்தில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 100% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


சென்னை நிலவரம்


சென்னையில் நீட் தேர்வை 172 மாணவர்கள் எழுதிய நிலையில், 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், அதில் 1,957 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog