தற்காலிக ஆசிரியர் சிக்கலுக்கு விரைவில் வருகிறது தீர்வு
தற்காலிக ஆசிரியர்களை வைத்து, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் நீடித்து வந்த சிக்கலுக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் வகையில், காலிப்பணியிடங்கள் திரட்டும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.கொரோனா தொற்று பரவலுக்கு பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இம்மாத இறுதி வரை, சேர்க்கை நீட்டித்துள்ள நிலையில், பல பள்ளிகளில் புதிய சேர்க்கை நடத்த முடியாத அளவுக்கு, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு நீடித்து வந்தது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர். இதேபோல், மேல்நிலை வகுப்புகளுக்கும், தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு, கற்பித்தல் பணி தொடர்வதால், தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் ஏற்படும் என, தலைமையாசிரியர்கள் ஆதங்கப்பட்டனர்.
ஏனெனில், அவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்குவதால், பள்ளி நேரத்தை தாண்டி, சிறப்பு வகுப்புகள் கையாள்வதில்லை. அதனால், கல்வியில் பின்தங்கியோரின் கற்றல் நிலையை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களின் விபரங்கள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment