தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் - முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு 16ஆயிரம் பேர் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி படங்களை நடத்த பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் கடந்த 10 ஆண்டுகளில் மரணம், ஓய்வு என 4ஆயிரம் காலியிடம் ஆகிவிட்டது. இதனால் தற்போது 12ஆயிரம் ஆசிரியர்களே பணியில் உள்ளார்கள்.
இந்த பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது 181வது வாக்குறுதியை கொடுத்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து இப்போது 16 மாதங்கள் ஆகியும், இன்னும் அதிமுக அரசில் இருந்த போது வழங்கிய ரூ 10ஆயிரம் சம்பளமே, திமுகவும் வழங்கி வருகிறது. 10ஆயிரம் சம்பளம் கொடுக்க பணியில் உள்ள 12ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ140 கோடி செலவாகிறது.
திமுக கொடுத்த வாக்குறுதியை தான், முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம். முதல்வரிடம் பலமுறை கோரிக்கை கொடுத்து விட்டோம். அதனை, விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment