பி.எட்., படிப்பு விண்ணப்பம் - மிக முக்கிய அறிவிப்பு!!
2022-23ஆம் கல்வியாண்டுக்கான பி.எட் பட்டப்படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது நாளை முதல் அக்டோபர் 3 வரை பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியலும் அக்டோபர் 12இல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியலறிவு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பிஎட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தொடர்புடைய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் பிஎட் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 11 முதல் 19 வரையிலான பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பொதுப் பிரிவினர் 50% விழுக்காடு மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 43%, பட்டியல் வகுப்பினர் 40% மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் இளநிலைப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதுமானதாக கொள்ளப்படும். அனைத்து வகை கல்லூரிகளிலும்பி.எட்., சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட உள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.
தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment