கொரோனொ கற்றல் இழப்புகளை சரிசெய்த இல்லம் தேடி கல்வி திட்டம்: ஆய்வு சொல்வதென்ன?




இல்லம் தேடிக் கல்வி திட்டம் கற்றல் இடைவெளியை குறைத்துள்ளது கலிபோர்னிய பல்கலைக்கழக பேராசிரியர் கார்திக் முரளிதரன் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


கோவை, திருச்சி, விருதுநகர் ,காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 5 முதல் 10 வயதுடைய 19,000. மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பேராசியர் கார்திக் முரளிதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் கல்வி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கிய பின்னர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஐந்து வயது முதல் வயது வரை உள்ள பள்ளி குழந்தைகள் கொரொனொ பொதுமுடக்கத்தால் கற்றல் திறனை பெருமளவில் இழந்துள்ளதை கண்டறிந்தனர்.



குறிப்பாக, 8 வயதுடைய மாணவன் 6 வயதுள்ள மாணவனின் கற்றல் திறனை பெற்றிருந்ததாக தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார். இல்லம் தேடிகல்வித்திட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மே,மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் மேற்கொண்ட ஆய்வில் மாணவர்களுக்கு கொரொனோ காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


 குறிப்பாக 3ல் 2 பங்கு மாணவர்களின் கற்றல் இடைவெளி தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு பங்கு மாணவர்களின் கற்றல் இடைவெளி குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகிறார் பேராசிரியர் கார்த்திக் முரளிதரன்.

Comments

Popular posts from this blog