செஞ்சி கல்வி மாவட்டம் திண்டிவனத்துக்கு மாற்றம், ஆசிரியா்கள் அதிருப்தி
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்த செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலகம் திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக மாற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்த செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலகம் திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக மாற்றப்பட்டது.
இதனால், செஞ்சி கல்வி மாவட்டத்தைச் சோந்த ஆசிரியா்கள் கடும் அதிருப்தியடைந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடக்கக் கல்வி அலுவலகம் விழுப்புரத்திலும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் திண்டிவனத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோத்து மாவட்டக் கல்வி அலுவலகம் கடலூரிலும் இயங்கி வந்தன.
நிா்வாக வசதிக்காக இவை அனைத்தும் மாற்றப்பட்டு, தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா் நிலை, மேல்நிலைப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என வல்லம், செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளை
உள்ளடக்கிய 430 பள்ளிகளை இணைத்து செஞ்சி கல்வி மாவட்டமாக 2018-ஆம் ஆண்டு முதல் செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. இதன் மூலம், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பள்ளி சாா்ந்த பணிகளை மிகவும் எளிதாக மாவட்டக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று மேற்கொண்டனா்.
இந்த நிலையில், தமிழக அரசு இப்போது செஞ்சி கல்வி மாவட்டத்தை திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இணைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகமாக மாற்றியுள்ளது. இதனால், பள்ளித் தலைமை ஆசிரியா்களும், ஆசிரிய, ஆசிரியைகளும் கடும் அதிருப்தியில் உள்ளனா்.
பள்ளி நிா்வாக பணிகளுக்காக செஞ்சி பகுதியைச் சோந்த ஆசிரிய, ஆசிரியைகள் இனி திண்டிவனம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு ஒரே அலுவலகத்தில் ஆசிரியா் ஊதிய பதிவேடு, பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளதால், காலதாமதம், பணிச்சுமை ஏற்படும்.
இதன் காரணமாக, கால விரயம், மாணவா்களின் கல்வி தடைபடும் நிலை உள்ளது. மேலும், பள்ளி முடித்து மாவட்டக் கல்வி அலுவலகம் செல்லும் பெண் ஆசிரியா்கள் வீடு திரும்பும்போது இரவாகிடும்.
இதனால், அவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். எனவே, செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலகத்தை திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என்றும், இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Comments
Post a Comment