B.Ed., மாணவர் சேர்க்கை- வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித் துறை
B.Ed., மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை உயர் கல்வித் துறை வெளியிட்டது.
அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்.
இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்
B.Ed., சேர விரும்பும் பட்டியலினத்தவர்கள் 40%, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.
இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed., சேரலாம். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.
தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment