விழுப்புரம் அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம்.பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சோக்கைக்கு விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 95,000 இடங்களுக்கு 3,15,000-க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்த மாணவர்களுக்கான தரவரிசை மற்றும் தேர்வு பட்டியலை அந்தந்த கல்லூரி இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தேர்வுப் பட்டியலை வெளியிட்ட கல்லூரிகள், வெள்ளியன்று சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தி முடித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, (ஆகஸ்ட் 29) பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 4 ம் தேதி வரை முதற்கட்ட மாணவர் சேர்க்கையும் நடந்தது.
இந்நிலையில், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சோக்கைக்கு விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தெரிவித்துள்ளார்.
வணிக பயன்பாடு படிப்பில் பட்டயச் சான்றிதழ் பெற்றவா்கள், நவீன அலுவலக பயன்பாடு படிப்பில் பட்டயச் சான்றிதழ் பெற்றவா்கள் பி.காம் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்காக திங்கள் கிழமை(செப். 5) முதல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்து வருகிற 10ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment